உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  யமஹாவின் சர்வதேச ஏற்றுமதி மையமாகும் சென்னை

 யமஹாவின் சர்வதேச ஏற்றுமதி மையமாகும் சென்னை

யமஹா நிறுவனத்தின் சர்வதேச ஏற்றுமதி மையமாக சென்னையை உருவாக்கி வருகிறோம். குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இங்கிருந்து அதிக வாகனங்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை ஆலையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த தொடர்ந்து முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து 55 நாடுகளுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நடப்பாண்டு யமஹா இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி 25 சதவீதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. - இடாரு ஓட்டானி யமஹா மோட்டார் இந்தியா குழும தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி