வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள் , நல்லாட்சி தொடரட்டும் ..
மேலும் செய்திகள்
பட்டாபிராம் டைடல் பார்க் 2 நிறுவனங்கள் முன்பதிவு
26-Oct-2024
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில், 330 கோடி ரூபாய் செலவில், 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள, 'டைடல் பார்க்' கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் அதீத வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, 2000ல், பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன், சென்னை தரமணியில், 'டைடல் பார்க்' கட்டடம் கட்டப்பட்டது. இதேபோல், வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைத்து, தகவல் வேலை வாய்ப்பை உருவாக்க, பட்டாபிராமில், 11.41 ஏக்கரில், 330 கோடி ரூபாய் செலவில், 5.57 லட்சம் சதுர அடியில், 21 தளங்கள் கொண்ட, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, 'டைடல் பார்க்' கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின், நேற்று திறந்து வைத்தார். இக்கட்டடத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைதொடர்பு வசதிகள், தடையற்ற மின்சாரத்திற்கு உயரழுத்த மும்முனை மின் இணைப்பு என, பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மொத்தம், 6,000 பேர் பணிபுரியும் வகையில், பசுமை கட்டட விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. பட்டாபிராமில் கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் வாயிலாக, தமிழகத்தின் வட பகுதியை சார்ந்த, குறிப்பாக, திருவள்ளூர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன், அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. டைடல் பார்க் துவக்க விழாவில், அங்கு தொழில் துவங்க, 'வெப்பெராக்ஸ் சொல்யூஷன்ஸ், டாட்நிக்ஸ் டெக்னாலஜீஸ்' ஆகிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டு ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.927 கார்கள், 2,280 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதி, அரங்கம், உணவகம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன
வாழ்த்துக்கள் , நல்லாட்சி தொடரட்டும் ..
26-Oct-2024