மேலும் செய்திகள்
தொழில் துறை உற்பத்தி நவம்பரில் 6.70% வளர்ச்சி
3 minutes ago
உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழிகாட்டுகிறது அபெடா
23 hour(s) ago
சாட்காம் சேவை விரைவில் துவங்கும்
23 hour(s) ago
பெய்ஜிங்: புத்தாண்டில், பேட்டரி உதிரிபாகங்கள் போன்ற எரிசக்தி ஆதார பொருட்களின் வரிக்குறைப்பு உட்பட கிட்டத்தட்ட 925 பொருட்களின் இறக்குமதி வரியை குறைக்க சீனா முடிவு செய்துள்ளது. லித்தியம் - அயன் பேட்டரி தயாரிப்புக்கான, மறுசுழற்சி செய்யப்பட்ட கருப்பு பொடி மற்றும் சில மருந்து பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக, சீன சுங்க வரி கமிஷன் அறிவித்து உள்ளது. இதுபோல், அதிக வரி விதிப்பில் உள்ள 925 பொருட்களின் இறக்குமதி வரி, உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சீன அரசின் செய்தி ஏஜன்சி வெளியிட்ட செய்தியில், இறக்குமதி வரி குறைப்பு வாயிலாக, சீனாவின் தொழில்நுட்ப தன்னிறைவு உறுதிப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பசுமை பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு, இறக்குமதி வரி குறைப்பு உதவும் என்றும் மைக்ரோமோட்டார், அச்சு இயந்திரங்கள், சல்பியூரிக் ஆசிட் ஆகியவற்றின் மீதான வரியும் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இந்த இறக்குமதி வரி குறைப்பு அறிவிப்பால், வரும் ஆண்டில் அந்நாட்டுக்கு இந்திய மருந்து பொருட்கள், பேட்டரி உதிரிபாகங்கள் ஏற்றுமதி உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
3 minutes ago
23 hour(s) ago
23 hour(s) ago