உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.306 கோடி

சிட்டி யூனியன் வங்கி லாபம் ரூ.306 கோடி

சென்னை:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 16 சதவீதம் உயர்ந்து, 306 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இது 264 கோடி ரூபாயாக இருந்தது. கும்பகோணத்தை தலைமையிடமா க கொண்ட சிட்டி யூனியன் வங்கி, 876 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதன் முதல் காலாண்டு முடிவுகளை அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி நேற்று வெளியிட்டார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதல் மூன்று மாதங்களில் வங்கியின் வர்த்தகம் 1.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. வங்கியின் நிகர வட்டி வருமானம் 625 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. வங்கியின் நிகர வாராக்கடன் 1.20 சதவீதமாக குறைந்து உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை