உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்திய பிராண்ட் ஆகிறது சி.எம்.எப்., நத்திங் நிறுவன சி.இ.ஓ., அறிவிப்பு

இந்திய பிராண்ட் ஆகிறது சி.எம்.எப்., நத்திங் நிறுவன சி.இ.ஓ., அறிவிப்பு

புதுடில்லி:பிரிட்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான 'நத்திங்' அதன் துணை நிறுவனமான சி.எம்.எப்., இனி இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் என்று தெரிவித்துள்ளது. மொபைல் போன், இயர் போன் தயாரிக்கும் நத்திங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, இந்தியாவில் நத்திங் மற்றும் சி.எம்.எப்., நிறுவனங்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். இதன் பின் அவர் தெரிவித்ததாவது: நத்திங் நிறுவனத்தின் செயல்பாடுகள், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றின் மையமாக இந்தியாவை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக, இந்திய மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமான 'ஆப்டிமஸ் இன்பிராகாம்' உடன் இணைந்து, ஒரு கூட்டு உற்பத்தி நிறுவனத்தை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவை நத்திங் மற்றும் சி.எம்.எப்., தயாரிப்புகளுக்கான உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்ற இது வழிவகுக்கும். இரு நிறுவனங்களும் 887 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. இதனால், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 1,800க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். சி.எம்.எப்., நிறுவனத்தின் தலைமையகத்தை இந்தியாவில் அமைத்து, நாட்டின் முதல் உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டாக உருவாக்குவதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை