மேலும் செய்திகள்
இந்திய ஏ.ஐ., ஆராய்ச்சி அமைப்பு குஜராத்தில் அமைக்க ஒப்புதல்
11 minutes ago
வர்த்தக துளிகள்
30-Dec-2025
புதுடில்லி: நிறுவனங்கள், கடந்த 2024 - 25ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் ஆண்டு அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான அவகாசம் இன்றோடு முடிவடையவிருந்தது குறிப்பிடத்தக்கது. அறிக்கைகளைத் தாக்கல் செய்யும் இணையதளத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் அறிக்கைகளைத் தாக்கல் செய்யும் நிறுவனங்கள் , கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. எம்.ஜி.டி., - 7, ஏ.ஓ.சி., - 4 உள்ளிட்ட பல்வேறு முக்கிய படிவங்களுக்கு இந்த கால நீட்டிப்பு பொருந்தும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
11 minutes ago
30-Dec-2025