உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

அம்புஜா சிமென்ட்ஸ் ரூ.14,500 கோடி முதலீடு அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம், தனது சிமெண்ட் உற்பத்தி திறனை 15.5 கோடி டன்னாக உயர்த்துவதற்காக 14,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு தேவைகள் அதிகரித்து வருவதால், அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஆலைகளை அமைத்து, வரும் 2030 நிதியாண்டுக்குள் இந்த இலக்கை எட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் 'வல்ச்சர்' ஏ.ஐ., சூப்பர் கிளஸ்டர் தொடக்கம் அமெரிக்காவின் 'வல்ச்சர்' கிளவுட் நிறுவனம், அமெரிக்காவுக்கு வெளியே தனது மிகப்பெரிய 20 மெகாவாட் 'ஏ.ஐ., சூப்பர் கிளஸ்டர்' மையத்தை சென்னையில் தொடங்கியுள்ளது. 10,000க்கும் மேற்பட்ட ஏ.எம்.டி., பிராசசர்களை கொண்ட இம்மையம், ஏ.ஐ., பயிற்சி மற்றும் தரவு ஆய்வுகளுக்கு உதவும். இந்திய ஏ.ஐ., ஸ்டார்ட்அப்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பி.ஓ.ஐ., சூரியோதய் வங்கி டிபாசிட் வட்டி உயர்வு பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியா மற்றும் சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகியவை நிலையான வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. பேங்க் ஆப் இந்தியா, 3 கோடி ரூபாய்க்கு உட்பட்ட மற்றும் 3 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு 1–3 ஆண்டுகளுக்கான குறிப்பிட்ட முதிர்வு கால வட்டியை உயர்த்தியுள்ளது. மேலும் 500 நாட்களுக்கான சிறப்பு திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மாற்றம் நவ.,2 முதல் அமலுக்கு வருகிறது. அம்புஜா சிமென்ட்ஸ் ரூ.14,500 கோடி முதலீடு அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம், தனது சிமெண்ட் உற்பத்தி திறனை 15.50 கோடி டன்னாக உயர்த்துவதற்காக 14,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் உட்கட்டமைப்பு தேவைகள் அதிகரித்து வருவதால், அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஆலைகளை அமைத்து, வரும் 2030 நிதியாண்டுக்குள் இந்த இலக்கை எட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் 'வல்ச்சர்' ஏ.ஐ., சூப்பர் கிளஸ்டர் தொடக்கம் அமெரிக்காவின் 'வல்ச்சர்' கிளவுட் நிறுவனம், அமெரிக்காவுக்கு வெளியே தனது மிகப்பெரிய 20 மெகாவாட் 'ஏ.ஐ., சூப்பர் கிளஸ்டர்' மையத்தை சென்னையில் தொடங்கியுள்ளது. 10,000க்கும் மேற்பட்ட ஏ.எம்.டி., பிராசசர்களை கொண்ட இம்மையம், ஏ.ஐ., பயிற்சி மற்றும் தரவு ஆய்வுகளுக்கு உதவும். இந்திய ஏ.ஐ., ஸ்டார்ட்அப்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பி.ஓ.ஐ., சூரியோதய் வங்கி டிபாசிட் வட்டி உயர்வு பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியா மற்றும் சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகியவை நிலையான வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. பேங்க் ஆப் இந்தியா, 3 கோடி ரூபாய்க்கு உட்பட்ட மற்றும் 3 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு 1–3 ஆண்டுகளுக்கான குறிப்பிட்ட முதிர்வு கால வட்டியை உயர்த்தியுள்ளது. இம்மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை