உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கொள்முதல் விலை குறைப்பால் பாதிப்பு என கவலை

கொள்முதல் விலை குறைப்பால் பாதிப்பு என கவலை

பொள்ளாச்சி : 'அமெரிக்க வரி விதிப்பை காரணம் காட்டி, கேரளாவில் கயிறுக்கான கொள்முதல் விலையை குறைப்பதால், தென்னை நார் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது,'' என, கயிறு உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் தெரிவித்தார். கயிறு உற்பத்தியாளர் நலச்சங்க கலந்தாய்வு கூட்டம், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடந்தது. தென்னை நார் கயிறு விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. மூலப்பொருள் பற்றாக்குறை உள்ளதால், பாதிப்பு ஏற்பட்டு தொழிலை விட்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, மூலப்பொருட்களின் விலை மற்றும் உற்பத்தி செலவையும் கணக்கில் கொண்டு, 'லுாஸ் ப்ரி' கயிற்றின் விலை, கிலோ 44 - 46 ரூபாய் என நிர்ணயம் செய்து, அதற்கு குறைவாக கொடுக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டது. கயிறு உற்பத்தியாளர் நலச்சங்க மாநில தலைவர் காந்திராமசாமி கூறியதாவது: தமிழகத்தில், 800 - 1,000 தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. ஒரு நாளுக்கு, 2 லட்சம் கிலோ கயிறு உற்பத்தி செய்து கேரளாவுக்கும், ஒரு லட்சம் கிலோ உற்பத்தி செய்து வடமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கேரளாவில் இருந்து, கயிறு மேட் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மூலப்பொருட்கள் பற்றாக்குறை, விலை வீழ்ச்சி காரணமாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, கேரளாவில் கயிறு கொள்முதல் விலையை ஆண்டுதோறும், இரண்டு - மூன்று மாதங்கள் குறைப்பது வாடிக்கையாகிஉள்ளது. நடப்பாண்டு அமெரிக்க வரி விதிப்பை காரணம் காட்டி விலையை குறைத்துள்ளனர்.அமெரிக்காவுக்கு, 15 சதவீதம் மட்டுமே கயிறு மேட் செல்கிறது. யூரோப், சவுத் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குத்தான் அதிகளவு செல்கின்றன. இந்த சூழலில் கொள்முதல் விலை குறைப்பால் கயிறு உற்பத்தி பாதிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். கயிறு கிலோ, 54 - 55 ரூபாய் வரை விலை இருந்தது. தற்போது, 37 - 39 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !