உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மதுரையில் டைடல் பார்க் விரைவில் ஒப்பந்த ஆணை

மதுரையில் டைடல் பார்க் விரைவில் ஒப்பந்த ஆணை

சென்னை:மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணி அருகில், 5.60 ஏக்கரில், 12 தளங்களுடன் டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. திட்டச் செலவு, 245 கோடி ரூபாய். இங்குள்ள தளங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படும். இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மதுரை டைடல் பார்க் வடிவமைப்பு, திட்ட மேலாண்மை ஆலோசகராக டாடா கன்சல்டன்சி தேர்வாகி உள்ளது. இந்நிறுவனம் வழங்கிய வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு, கட்டுமான பணிக்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டதில், மூன்று நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் தகுதி வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ஒப்பந்த ஆணை வழங்கி, பணிகள் துவங்கப்படும்; கட்டுமான பணிகளை டாடா கன்சல்டன்சி கண்காணிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை