| ADDED : பிப் 17, 2024 01:18 AM
புதுடில்லி:வாகனங்களுக்கு பாஸ்டேக் வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ள 32 வங்கிகளின் பட்டியலில், பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்க கட்டணம் வசூலிக்கும் பிரிவான இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம், வாகனங்களுக்கு பாஸ்டேக் வழங்க அங்கீகரிக்கப்பட்ட 32 வங்கிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி இடம்பெறவில்லை.சமீபத்தில் ரிசர்வ் வங்கி, பிப். 29ம் தேதிக்கு பின், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி, டிபாசிட்கள் பெறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு, பேடிஎம் பாஸ்டேக் பயனர்கள், சுங்கச்சாவடிகளில் எந்த வித சிக்கலையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.அதன்படி, பழைய பேடிஎம் பாஸ்டேக் பயனர்கள், அங்கீகரிக்கப்பட்ட எதேனும் ஒரு வங்கியிடம் இருந்து புதிய, பாஸ்டேக்'ஐ பெற வேண்டும்.வரும் 29ம் தேதிக்கு பின், பயனர்கள் பேடிஎம் பாஸ்டேக்குகளை ரீசார்ஜ் செய்ய முடியாது. இருப்பினும், இருப்பு உள்ளவரை அதை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதிக்கு பின், பயனர்கள் பேடிஎம் பாஸ்டேக்குகளை ரீசார்ஜ் செய்ய முடியாது இருப்புத் தொகை உள்ளவரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் இந்தியாவில் கிட்டத்தட்ட 2 கோடி பேடிஎம் பாஸ்டேக் பயனர்கள் உள்ளனர்.