டீசல் பயன்பாடு 4 சதவிகிதம் உயர வாய்ப்பு
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த டீசல் பயன்பாடு 3 - 4 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என, 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் தலைவர் சதீஷ்குமார் தெரிவித்து உள்ளார்.டில்லியில் ஐ.ஓ.சி., தலைவர் சதீஷ்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:கனமழை காரணமாக கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையிலும், நாட்டின் டீசல் பயன்பாடு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்தில் 1 சதவீதம் அதிகரித்து, 4.44 கோடி டன்களாக இருந்தது. தற்போது மழைப்பொழிவு நின்று, பயிர்கள் அறுவடை துவங்க இருப்பதால், டீசல் பயன்பாடு அதிகரிக்கத் துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.