மேலும் செய்திகள்
பெற்றோர் செய்ய வேண்டியதென்ன?
17-Aug-2025
ஜி.எஸ்.டி.., சீர்திருத்தம் அமலுக்கு வரும் வரை பெரிய நுகர்வு முடிவுகளை தள்ளிப்போடுவது பலன் தருமா என்பது பற்றி ஒரு அலசல்.அண்மையில் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் வரும் 22 ம் தேதி அமலுக்கு வர உள்ள நிலையில், மாற்றி அமைக்கப்பட்ட வரி விதிப்பு நுகர்வை அதிகரித்து, பொருளாதார பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் அமெரிக்க வரி விதிப்பு ஆகியவற்றின் தாக்கத்தை எதிர்கொள்ள ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் உதவும் என்பதோடு, பொதுவாக மக்களின் நுகர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது, நுகர்வுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் நிலை உள்ளது. நுகர்வு முடிவுகள்
மாற்றி அமைக்கப்படும் வரி விதிப்பால் நுகர்வு அதிகரிக்கும் என்பது உறுதியாக தெரிந்தாலும், நிறுவன முதலீடுகளில் இதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பது குறித்து வல்லுனர்கள் விவாதித்து வருகின்றனர். நுகர்வு அதிகரிப்பு நீடிப்பதன் அடிப்படையில் முதலீடு அதிகரிப்பு நிகழலாம் என கருதப்படுகிறது. இதனிடையே நுகர்வோரை பொருத்தவரை வரி மாற்றத்தின் பலன் பெற முக்கிய நுகர்வு முடிவுகளை தள்ளிப்போட வேண்டுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே எந்த எந்த பிரிவில் உள்ள பொருட்களின் விலை குறையும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரிய தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின், சிறிய கார்கள் உள்ளிட்டவற்றின் விலை குறையும். மேலும் வீட்டு உபயோக பொருட்களின் விலையும் குறையும். எனினும், இந்த குறைப்பு 22ம் தேதிக்கு பின்னரே அமலுக்கு வரும். எனவே, இந்த பொருட்களை வாங்குவதை தள்ளிப்போட்டால், வரி குறைப்பின் பலனை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கணிசமாக முடியும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது நுகர்வோர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடனடி தாக்கம்
பல்வேறு பிரிவுகளில் பொருட்களின் விலை குறையும் என்றாலும், சில பிரிவுகளில் இந்த மாற்றம் உடனடியாக நிகழாது என்றும் வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். வினியோகஸ்தர்களும், டீலர்களும் பழைய வரி விதிப்பு கொண்ட பொருட்களை கையிருப்பில் கொண்டிருக்கலாம். எனவே, இவை வரி விதிப்பின் பலனை கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு சில டீலர்கள் இதன் தாக்கத்தை ஏற்றுக்கொள்ள முன் வந்தாலும், மற்றவர்கள் தாமதிக்கலாம். இதன் காரணமாக ஏற்கனவே கணிசமாக தள்ளுபடி சலுகை கொண்ட பொருட்கள் பிரிவில் அதிக தாக்கம் இருக்காது என்கின்றனர். அதே நேரத்தில், போட்டி மிக்க பிரிவுகளில் வரி மாற்றத்தின் பலன் உடனடியாக அமலுக்கு வரலாம் என்றும் கருதப்படுகிறது. மொபைல் போன்கள், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் இந்த பிரிவின் கீழ் வரலாம். இவற்றை பொருத்தவரை காத்திருந்து வாங்குவது அதிக பலனை அளிக்கலாம். வரி மாற்றத்தின் பலன் மொத்த வினியோக சங்கிலி முழுவதும் பரவ காலம் தேவைப்படும். எனவே, எல்லா பிரிவுகளிலும் உடனடி பலன் இருக்க வாய்ப்பில்லை. மேலும், வரி மாற்றத்தில் 40 சதவீத பிரிவில் உள்ள பொருட்கள் தொடர்ந்து விலை அதிகமாகவே இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்படியும் இந்த பண்டிகை காலம் நுகர்வோருக்கு உற்சாகமானதாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை.
17-Aug-2025