உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சைபர் மோசடியில் ரூ.2 கோடியை இழந்தது டாக்டர் ரெட்டீஸ்

சைபர் மோசடியில் ரூ.2 கோடியை இழந்தது டாக்டர் ரெட்டீஸ்

பெங்களூரு: பெங்களூரை சேர்ந்த குரூப் பார்மாசூட்டிகல்ஸ் , ஹைதராபாத் டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டீரிஸ் நிறுவனத்துக்கு 2.16 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளை வினியோகித்து இருந்தது. இந்நிலையில், கடந்த நவ., 3ம் தேதி, இரு நிறுவனங்களின் மின்னஞ்சலை ஊடுருவல் செய்த மர்மநபர்கள், நிலுவைத் தொகை தொடர்பாக ரெட்டீஸ் லேபாரட்டீரிஸ் நிறுவனத்தின் நிதி கணக்கு பிரிவுக்கு, மோசடி வங்கி கணக்கு விபரங்களை அனுப்பினர். இதனை அறியாமல், ரெட்டீஸ் லேபாரட்டீரிஸ், 2.16 கோடி ரூபாயை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளது. சைபர் மோசடியில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குரூப் பார்மாசூட்டிகல்ஸ் புகார் அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை