உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துபாயில் உலக ஆடை கண்காட்சி மே மாதம் நடைபெறுகிறது

துபாயில் உலக ஆடை கண்காட்சி மே மாதம் நடைபெறுகிறது

திருப்பூர்:சர்வதேச ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி கண்காட்சி, துபாயில் மே 20 முதல், 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ஆயத்த ஆடை ஆர்டர்களை நம் நாட்டினர் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கான ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில், 28.33 சதவீத பங்களிப்புடன் சீனா முதலிடத்திலும்; 16 சதவீத பங்களிப்புடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் இடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதால், ஆண்டுக்கு ஆண்டு வர்த்தகம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி, 56,157 கோடி ரூபாய். இதில், இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 8,425 கோடி ரூபாய்.துபாயில் உள்ள, 'பெஸ்டிவல் அரேனா' வர்த்தக கண்காட்சி அரங்கில், மே 20ல் துவங்கி, 22ம் தேதி வரை, சர்வதேச ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி கண்காட்சி நடக்கிறது. பல்வேறு நாடுகளின் வர்த்தகர்கள், கண்காட்சியை பார்வையிட முன்பதிவு செய்துள்ளனர். புதிய வர்த்தக வாய்ப்புகளை பெற முடியும் என்பதால், நம் நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு கண்காட்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாகிகள் கூறுகையில், 'இந்தியாவுக்கு புதிய ஆயத்த ஆடை ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய டிசைனில் உருவான பின்னல் துணி, இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தொடர்பான அறிமுகமும் கிடைக்கும். மத்திய அரசு மானிய உதவியுடன், ஏற்றுமதியாளர்கள் பயன் பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு, இங்குள்ள கியூ.ஆர்.கோடை பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி