உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்

அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்

நாமக்கல், அமெரிக்காவில் முட்டைக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டதால், நாமக்கலில் இருந்து முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர். அமெரிக்க அரசு, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய, சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. அதை தொடர்ந்து, கடந்த ஜூன் முதல், துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி துவங்கியது. வாரம் ஒரு கோடி முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் என பண்ணையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், அமெரிக்க அரசின் இறக்குமதி வரி அறிவிப்பால் ஏற்றுமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து ஏற்கனவே துபாய், பஹ்ரைன், கத்தார், ஓமன், ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மாதந்தோறும், 15 கோடி முட்டைகள் ஏற்றுமதியாகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி