உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மஹிந்திரா குழும நிறுவனத்தை கைப்பற்றுகிறது எம்பிரயர்

மஹிந்திரா குழும நிறுவனத்தை கைப்பற்றுகிறது எம்பிரயர்

புதுடில்லி: விமானம், ராணுவம் சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும், மஹிந்திரா குழுமத்தை சேர்ந்த நோவாவையு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை, பிரேசில் நாட்டின் எம்பிரயர் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது. எம்பிரயர் நிறுவனம், அதன் பெரும்பாலான பங்குகளை கைபற்றுவதால், அந்நிறுவனத்தின் துணை நிறுவனமாக மாறுகிறது. ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை எம்பிரயர் நிறுவனமும், மீதம் உள்ள 49 சதவீத பங்குகளை மஹிந்திரா டிபன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனமும் வைத்திருக்கும். எம்பிரயர் நிறுவனம், சரக்கு, பயணியர் மற்றும் ராணுவ விமானங்களை உற்பத்தி செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nagarajan D
அக் 14, 2026 10:03

இதில் என்ன ஒரு செய்தி குறை சொல்ல ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் அந்த வெளி நாடு நிறுவனம் 51% பங்குகளை கொண்டுள்ளது அவ்வளவு தான்.. இதற்க்கு ஏன் இப்படி கூப்பாடு என்று புரியவில்லை.. இங்கே நம் நாட்டின் எதிர்க்கட்சி முதலாளியே 100% வெளிநாட்டு காரர் தான்...


RAMANATHAN MUTHIAH
அக் 12, 2026 10:07

மஹிந்திரா டிஃபன்ஸ் எப்போதும் போல் இயங்குகிறது. இப்போது ஒரு 6000 கோடி ப்ராஜெக்ட் எடுக்க தொழில்நுட்பம் அந்த நிறுவனத்திடம் உள்ளது. அதற்காக அந்த நிறுவனத்துடன் சேர்ந்து அமைக்கப்பட்ட JV என்று சொல்லப்படும் joint venture - அதில் தான் அவர்களுக்கு 51 சதம்.


Tetra
அக் 11, 2026 17:41

எதற்கு விற்க வேண்டும்? ஆனந்த் ஏழையாகி விட்டாரா. அல்லது திறமையற்ற ஊழியர்களால் பாதிப்பா?


சமீபத்திய செய்தி