ரஷ்ய எரிசக்தி நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் தடை: ஷாப்கிரானாவை கையகப்படுத்தியது உதான்
ரஷ்ய எரிசக்தி நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் தடை
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போர் காரணமாக, அந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கையாக, இந்தியாவின் குஜராத்தில் செயல்பட்டு வரும், ரஷ்யாவுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான 'ரோஸ்நெப்ட் இந்தியா' மீது, ஐரோப்பிய யூனியன் தடைகளை விதித்துள்ளது. வங்கி கடன், ரஷ்ய கச்சா எண்ணெயில் எரிபொருள் தயாரிப்புகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் பெட்ரோல் பம்ப், 2 கோடி டன் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கொண்டுள்ள நயாரா நிறுவனத்தில், ரோஸ்நெப்ட் நிறுவனத்துக்கு 49.13 சதவீத பங்கு உள்ளது.
ஷாப்கிரானாவை கையகப்படுத்தியது உதான்
பெங்களூரை தளமாகக் கொண்ட மின்னணு வணிக நிறுவனமான 'உடான்' மத்திய பிரதேசத்தின் இந்துாரைச் சேர்ந்த சில்லரை மின்னணு வணிக நிறுவனமான 'ஷாப்கிரானா'வின் 100 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஷாப்கிரானாவின் பங்குதாரர்கள் மற்றும் முக்கிய முதலீட்டாளர்கள், உடான் நிறுவனத்தில் 7 முதல் 8 சதவீத பங்குகளை கூட்டாக பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.