உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நியாயமற்ற வணிக செயல்பாடு ஆப்பிள் மீதான புகாரில் ஆதாரம்

நியாயமற்ற வணிக செயல்பாடு ஆப்பிள் மீதான புகாரில் ஆதாரம்

இந்தியாவில் போட்டி ஆணையத்தின் விதிகளை மீறும் வகையில், ஆப்பிளின் ஆப் ஸ்டோர் செயல்பாடுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இருப்பினும், போட்டி ஆணையத்தின் முழுமையான விசாரணைக்கு பிறகே, உண்மை தெரியவரும்.ஆப்பிள் நிறுவனம் தன் ஆப் ஸ்டோரில், பிற செயலிகளுக்கு தன்னிச்சையாக கட்டுப்பாடுகள் விதித்து, தன் பேமன்ட் செயலிக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, கடந்த 2021, டிசம்பரில், இந்திய போட்டி ஆணையம், விசாரணையை துவக்கி இருந்தது. மேலும், டிஜிட்டல் செயலிகளை தரவிறக்கம் செய்வதற்கு செலுத்தப்படும் கட்டணத்தில், 30 சதவீதம் வரை கமிஷனாக வசூலிப்பதும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ள ஆப்பிள், 'ஆப் ஸ்டோரில் இடம்பெற்றுள்ள வழிகாட்டுதல்கள் தன்னிச்சையானவை அல்ல. நுகர்வோருக்கு பாதுகாப்பான தளத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என விளக்கமளித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை