மேலும் செய்திகள்
இனி, வசந்த காலம்! தொழில்துறையினர் நம்பிக்கை
02-Jan-2025
திருப்பூர்:வங்கதேச ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்த, 'கவுன்ட்டர்வைலிங்' அல்லது 'ஆன்ட்டி டம்பிங்' வரிகளை விதிக்க வேண்டுமென, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, திருப்பூர் 'சைமா' தலைவர் ஈஸ்வரன் அனுப்பிய கடிதம்:பின்னலாடை தொழில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில்கள் சீராக நடைபெற, நுால் விலை சீராக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மத்திய அரசு பஞ்சுக்கு விலை நிர்ணயம் செய்கிறது. எனவே ஜவுளித்தொழில் சீராக இயங்க, சீரான விலையில் நுால் தடையின்றி கிடைக்க, வழிவகை செய்ய வேண்டும்.வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்ததால், உள்நாட்டு சந்தை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வரிச்சலுகையுடன் ஆடை இறக்குமதியாவதால், குறைந்த விலை ஆடைகளை உள்ளூர் சந்தைகளில் குவிக்கின்றனர். இதன் காரணமாக, திருப்பூர் பனியன் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து, மிகக்குறைந்த விலைக்கு வரிச்சலுகையுடன் மூலப்பொருட்களை வாங்கி, துணியாகவும், ஆடைகளாகவும் மாற்றி, இந்தியாவுக்கே மீண்டும் ஏற்றுமதி செய்கின்றனர். இது, நம் நாட்டு ஜவுளித்தொழிலுக்கு மிகுந்த சிக்கலை உருவாக்கியுள்ளது. வங்கதேச ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு, ஆயத்த ஆடை மற்றும் துணி ரகங்களுக்கு, 'கவுன்ட்டர்வீலிங்' அல்லது 'ஆன்ட்டி டம்பிங்' வரிகளை விதித்து கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
02-Jan-2025