உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 6 மாதங்களில் மாற்றமில்லை

வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 6 மாதங்களில் மாற்றமில்லை

புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், வேளாண் மற்றும் பதப்படுத்திய உணவு பொருட்கள் ஏற்றுமதி ஒரு சதவீதம் குறைந்துள்ளது.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், பாசுமதி அரிசி ஏற்றுமதி 17 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இது ஒட்டுமொத்த வேளாண் விளைபொருள் ஏற்றுமதி மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக, வணிகர்கள் தரப்பில் கூறப்பட்டது. எனினும், ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான அரிசி ஏற்றுமதி, வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.பழங்கள், மாட்டுக்கறி ஏற்றுமதி, கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், சிறிது அதிகரித்தது. நீளமான பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மட்டும் 11 சதவீதம் அதிகரித்ததாகவும்; டன்னுக்கு 950 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, கடந்த மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டதே இதற்கு காரணம் என்றும் வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், பாசுமதி அல்லாத அரிசி ரகங்களின் ஏற்றுமதி 17 சதவீதம் சரிவு கண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி