உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தோல் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்காது

தோல் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்காது

சென்னை:அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு, நம் நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதியை பெரியளவில் பாதிக்காது என, தோல் ஏற்றுமதி கழக செயல் இயக்குநர் செல்வம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் ஆக., வரை, 25,000 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தின் பங்கு, 8,000 கோடி ரூபாய். அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால், தோல் பொருட்கள் ஏற்றுமதி பெரியளவில் பாதிக்காது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவும். இது, நிரந்தரமான பிரச்னை இல்லை. குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஏற்றுமதி, 3,508 கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு ஆண்டு ஆகஸ்டில், 3,517 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் ஏற்றுமதி, 1 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !