உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கூடுதல் ஓய்வூதியம் கெடு நீட்டிப்பு

கூடுதல் ஓய்வூதியம் கெடு நீட்டிப்பு

புதுடில்லி:பி.எப்., சந்தாதாரர்கள் மாதந்தோறும் ஊதியத்தில் இருந்து செலுத்தும் 12 சதவீத சந்தாவில், 8.33 சதவீதம் ஓய்வூதிய நிதிக்காக ஒதுக்கப்படுகிறது.அதிக ஊதியம் பெறும் சந்தாதாரர்கள், கூடுதலாக ஓய்வூதியம் பெற விரும்பினால், தங்கள் சந்தா தொகையை அதிகமாக செலுத்த அனுமதிக்குமாறு, உச்ச நீதிமன்றம் 2022ல் உத்தரவிட்டது.அதன்படி, 2023 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, மே 2023ல் முடிவதாக இருந்தது. எனினும், ஊழியர்களிடம் வரவேற்பு கிடைத்ததன் காரணமாக, 2023 ஜூலை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டதில், 17.49 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்த விண்ணப்பங்கள் மீது, பி.எப்., சந்தாதாரரின் ஊதிய விபரங்களை, நிறுவனங்கள் பி.எப்., தளத்தில் பதிவேற்ற கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. எனினும், 3.10 லட்சம் விண்ணப்பங்கள் மீது, நிறுவனங்கள் ஊதிய விபரத்தை பதிவேற்றாததால், மேலும் அவகாசம் கேட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி