உங்கள் நிதி பாதுகாப்பிற்கு வழிகாட்டும் நிதி தீர்மானங்கள்!
புதிய ஆண்டின் துவக்கம், புதிய வாய்ப்புகளையும், புதிய பாதைகளையும் கொண்டிருப்பதாக அமைகிறது. கடந்த ஆண்டை திரும்பிப் பார்த்து, நடந்தவற்றை அலசி ஆராய்ந்து, மாற்றங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது. மேலும், நிதி நோக்கிலும் சேமிப்பு, முதலீடு இலக்குகளை அலசிப் பார்த்து, சேமிப்பை அதிகரிப்பது, கடன் சுமையை எதிர்கொள்வது, அதிக இடர் முதலீடுகளை தவிர்ப்பது போன்ற செயல்கள் மூலம் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ளலாம். அந்த வகையில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நிதி தீர்மானங்களை பார்க்கலாம்.சீரான முதலீடு:
அதிக பலனுக்கு ஆசைப்பட்டு இடர் மிக்க முதலீடுகளை நாடுவது ஆபத்தானது. சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப முதலீடுகளை மேற்கொள்வது இடர் மிக்கது. தகவல் சார்ந்த முதலீடு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, சீரான முதலீட்டை மேற்கொள்வேன் என்று உறுதி கொள்ளவும்.மேலும் முதலீடு:
ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் முதலீட்டை சிறிதளவு அதிகரிப்பது நல்ல பலனை தரும். அதிலும் குறிப்பாக ஊதிய உயர்வு அல்லது போனஸ் கிடைக்கும் போது, அதிகரிக்கும் வருமானத்திற்கு ஏற்ப முதலீட்டை அதிகரிக்கவேண்டும். வீண் செலவுகளை கட்டுப்படுத்தியும் சேமிப்பைஅதிகமாக்கலாம்.காப்பீடு பாதுகாப்பு:
நிதி பாதுகாப்பிற்கு காப்பீடு முக்கியம் என்பதை புரிந்து கொள்வது அவசியம். வரிச்சலுகை நோக்கில் மட்டும் காப்பீட்டை அணுகக் கூடாது. முதலீடு நோக்கிலும் காப்பீட்டை அணுகுவது தவறு. நிதி சூழலுக்கு ஏற்ற காப்பீடு பாதுகாப்பு அவசியம். எனவே, காப்பீட்டை அலசி ஆராய்ந்து, போதிய காப்பீட்டை உறுதி செய்து கொள்ள வேண்டும்.கடன் வலை:
பல்வேறு கடன்கள் இருந்தால், குறிப்பாக அதிக வட்டி கொண்ட கடன்கள் இருந்தால் கடன் நிர்வாகத்தில் கவனம் தேவை. எனவே, கடன் சுமையில் இருந்துவிடுபடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தேவையில்லாத புதிய கடன்களை நாடுவதில்லை எனதீர்மானிக்க வேண்டும்.
புதிய வகை முதலீடு:
கிரிப்டோ முதலீடு, மாற்று முதலீடு என பல வகை முதலீடு வாய்ப்புகள் ஈர்ப்பை ஏற்படுத்தலாம். ஆனால், முறைப்படுத்தப்படாத முதலீடு வாய்ப்புகள்ஆபத்தானவை. எனவே, அடிப்படை புரிதல் இல்லாதமுதலீடு வாய்ப்புகளை தவிர்ப்பது நல்லது. இதற்கான உறுதிமொழியும் வழிகாட்டும்.