ஆபரண கற்கள் நகைகள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரித்தது
புதுடில்லி:ஆபரண கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி, கடந்த ஆக., மாதத்தில் 9.67 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதாக ஆபரண கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் அறிக்கை: கடந்த ஆண்டு ஆக., மாதத்தில், நாட்டின் ஆபரண கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி 12,887 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட இது 5.17 சதவீதம் அதிகம். ஆனால், சென்ற மாதத்தில், ஏற்றுமதி 16,896 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட 10 சதவீத வளர்ச்சியாகும். எதிர்வரும் பண்டிகை சீசன், சர்வதேச அளவில் அதிகரிக்கும் தேவை ஆகியவற்றை கருதி, கச்சா மற்றும் செமி பினிஷ்டு தயாரிப்புகளின் தேவை உயர்ந்துள்ளது. எனினும், பாலிஷ் செய்யப்பட்ட, பட்டை தீட்டப்பட்ட வைர ஏற்றுமதி கடந்த ஆக., மாதத்தில் குறைந்துள்ளது.