ஜெர்மனி வேதியியல் நிறுவனம் ரூ.12,900 கோடி முதலீடு
புதுடில்லி:வேதியியல் துறையைச் சேர்ந்த ஜெர்மனி நிறுவனம் ஒன்று, இந்தியாவில் 12,900 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். இருப்பினும் அவர் எந்த நிறுவனம் என்பதையும் எந்த மாநிலத்தில் முதலீடு செய்ய உள்ளது என்பதையும் தெரிவிக்கவில்லை.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வேதியியல் துறையைச் சேர்ந்த ஜெர்மனி நிறுவனம் ஒன்று, இந்தியாவில் 12,900 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இத்திட்டத்திற்காக, துறைமுகம் அருகில் உள்ள 250 ஏக்கர் பரப்பளவு நிலம் தேவைப்படுவதாக, அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்கேற்ப ஒரு மாநிலத்தை அந்நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலத்தின் முதல்வருடன், நிறுவனத்தின் தலைவர் இன்று சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜெர்மனி, இந்தியாவின் ஒன்பதாவது பெரிய முதலீட்டாளராகும். இவ்வாறு அவர் கூறினார்.