உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கோதாவரி பயோரீபைனரிஸ் 22ம் தேதி ஐ.பி.ஓ., துவக்கம்

கோதாவரி பயோரீபைனரிஸ் 22ம் தேதி ஐ.பி.ஓ., துவக்கம்

எத்தனால் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமான கோதாவரி பயோரீபைனரிஸ், விரிவாக்கம் செய்யவும், கடனை திருப்பிச் செலுத்தவும் 555 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு புதிய பங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது. புதிய பங்குகளை வரும் 22ம் தேதி முதல் வெளியிட உள்ளது. ஒரு பங்கின் விலை 334 முதல் 352 ரூபாய் வரை என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. பங்கு விற்பனை வரும் 22ம் தேதி துவங்கி, 25ம் தேதி முடிவடைகிறது. இந்நிறுவனம், புதிய பங்குகள் வாயிலாக 325 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகையை, பங்குதாரர்களின் பங்குகள் வாயிலாகவும் திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ