உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தங்க பத்திரங்கள் முதிர்வுக்கு முன் திரும்ப பெற கிராம் 7,325 ரூபாயாக நிர்ணயம்

தங்க பத்திரங்கள் முதிர்வுக்கு முன் திரும்ப பெற கிராம் 7,325 ரூபாயாக நிர்ணயம்

மும்பை:ரிசர்வ் வங்கி, கடந்த 2017-18 மற்றும் 2018-19 நிதியாண்டுகளில் வெளியிட்ட தங்க பத்திரங்களை நேற்று முதல் முன்கூட்டியே திரும்பப் பெறலாம் என்றும், அவ்வாறு பெறுவோருக்கு, யூனிட் ஒன்றுக்கு 7,325 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.அத்துடன், கடந்த ஏப்ரல் 18, 19, 22 ஆகிய மூன்று தேதிகளின் தங்கத்தின் சராசரி விலையை கொண்டே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். தங்கப் பத்திரங்கள் வெளியிடப் பட்ட நாளிலிருந்து ஐந்தாவது ஆண்டுக்கு பிறகே, முதலீட்டை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படும்.இதன் படி கடந்த 2017-18 நிதியாண்டில் நான்காவது கட்டமாகவும்; 2018-19 நிதியாண்டில் இரண்டாவது கட்டமாகவும் வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்களை, நேற்று முதல் முன்கூட்டிய திரும்பப் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவ்வாறு திரும்பப் பெறுவோருக்கு யூனிட் ஒன்றுக்கு 7,325 ரூபாய் வழங்கப்படும் என்றும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் என்ற அளவில் முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக தனிநபர்கள் 4 கிலோ வரையும், அறக்கட்டளை போன்றவை 20 கிலோ வரையும் முதலீடு செய்யலாம்.வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, ஒரு கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி