உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துருக்கி, அஜர்பைஜானுக்கு குட்பை விசா விண்ணப்பங்கள் 42 சதவிகிதம் சரிவு

துருக்கி, அஜர்பைஜானுக்கு குட்பை விசா விண்ணப்பங்கள் 42 சதவிகிதம் சரிவு

புதுடில்லி:துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்த்து வரும் நிலையில், அங்கு செல்வதற்கான விசா விண்ணப்பங்கள் 42 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 'அட்லிஸ்' என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:துருக்கி, அஜர்பைஜான் செல்வதற்கான விசா விண்ணப்பங்கள் 42 சதவீதம் சரிந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும், இந்நாடுகளுக்கான விசா நடைமுறையிலிருந்து பாதியிலேயே வெளியேறியவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் துருக்கி, அஜர்பைஜானுக்கான விசா விண்ணப்பங்கள் 64 சதவீதம் அதிகரித்திருந்தன. சமீபத்திய நடப்புகளால் இந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. அதிகபட்சமாக டில்லி, மும்பை போன்ற மெட்டோ நகரங்களில் தான் விசா விண்ணப்பங்கள் 53 சதவீதம் சரிந்துஉள்ளன. இந்துார், ஜெய்ப்பூர் போன்ற இரண்டாம் தட்டு நகரங்களில் 20 சதவீதம் சரிந்துள்ளது. தனி நபர்களைக் காட்டிலும், குழு விசா விண்ணப்பங்கள் தான் கணிசமாக குறைந்துள்ளன.இதனால், வியட்நாம், இந்தோனேசியா, எகிப்துக்கான விசா விண்ணப்பங்கள் 31 சதவீதம் அதிகரித்துள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி