உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜி.எஸ்.டி., பதிவில் சிரமங்கள் சமாளிக்க அரசு புதிய உத்தரவு

ஜி.எஸ்.டி., பதிவில் சிரமங்கள் சமாளிக்க அரசு புதிய உத்தரவு

புதுடில்லி:ஜி.எஸ்.டி., பதிவுக்கான விண்ணப்பங்களில் ஏற்படும் குறைகளை களைய, இந்திய குறைதீர்ப்பு குழு உத்தரவு பிறப்பித்தது. ஜி.எஸ்.டி., பதிவு கேட்டு விண்ணப்பிக்கும் வணிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு ஏப்ரலில் ஜி.எஸ்.டி., அதிக வசூலானது இதை உறுதிப்படுத்துகிறது.இந்நிலையில், ஜி.எஸ்.டி., பதிவுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தால், கூடுதல் ஆவணங்கள் கேட்டு அதிகாரிகள் தொந்தரவு செய்வதாக, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, விண்ணப்பத்தில் குறை ஏதும் இல்லாமல் இருந்தால், ஒரு வாரத்துக்குள் ஜி.எஸ்.டி., பதிவு செய்யப்பட வேண்டுமென, அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டுள்ளது. குறைகள் உள்ள விண்ணப்பங்களிலும் ஒரு மாதத்துக்குள் அவற்றை சரிசெய்து ஒப்புதல் வழங்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், மத்திய ஜி.எஸ்.டி., அதிகாரிகளுக்கு, நேற்று சுற்றறிக்கை அனுப்பிய சி.பி.ஐ.சி., - ஜி.எஸ்.டி., பதிவுக்கு விண்ணப்பிப்பவர்களின் மாதாந்திர குறைதீர் சந்திப்புகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.இதற்காக, விண்ணப்பத்தின் குறைகளை தீர்க்கும் வழிமுறையை அமைக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை