உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கடன் வழங்குவதை எளிதாக்க கிராமீன் கிரெடிட் ஸ்கோர்

கடன் வழங்குவதை எளிதாக்க கிராமீன் கிரெடிட் ஸ்கோர்

புதுடில்லி:விவசாயிகள், சுயதொழில் புரிபவர்கள் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிப்பதற்காக, ஆறு மாதங்களுக்குள் 'கிராமீன் கிரெடிட் ஸ்கோர்' முறையை துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன. பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஐ.பி.ஏ., எனப்படும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் இணைந்து, இதற்கான கட்டமைப்பை உருவாக்க அரசு பணியாற்றி வருகிறது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மாதிரியைப் போலவே, டிஜிட்டல் பரிவர்த்தனை தரவு, அரசு மானிய ரசீது மற்றும் யு.பி.ஐ., செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், கிராமப்புற கடன் வாங்குபவர்களின் கடன் தகுதி மதிப்பிடப்படும் என கூறப்படுகிறது.தரவு சார்ந்த இம்மதிப்பீட்டு முறை, கிராமப்புறங்களில் உள்ளோருக்கு ஏற்ற வகையில் கடன்களை வடிவமைப்பதற்கு வங்கிகளுக்கு உதவும். இதனால், தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கு கடன் எளிதாக கிடைக்கும். மேலும், மதிப்பீட்டின் அடிப்படையில் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதை இம்முயற்சி கணிசமாக அதிகரிக்கும் என, துறை சார்ந்த நிபுணர் கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.டிஜிட்டல் பரிவர்த்தனை தரவு, அரசு மானிய ரசீது மற்றும் யு.பி.ஐ., செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், கிராமப்புற கடன் வாங்குபவர்களின் கடன் தகுதி மதிப்பிடப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ