மேலும் செய்திகள்
மொத்த விலை பணவீக்கம் 0.13 சதவீதமாக குறைந்தது
15-Oct-2025
புதுடில்லி: கடந்த மாதத்துக்கான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், இதுவரை இல்லாத அளவுக்கு 0.25 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறையில் சில்லரை விலை பணவீக்கம், கடந்த 2012ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. கடந்த 2015 முதல் இதன் அடிப்படையிலான மாதாந்திர தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் வரலாற்றிலேயே கடந்த மாதத்தின் 0.25 சதவீதம் என்பது தான் மிகக் குறைவான பணவீக்கம் ஆகும். ஜி.எஸ்.டி., குறைப்பின் தாக்கம், காய்கறிகள், பழங்கள், எண்ணெய், தானியங்களின் விலை குறைவு மற்றும் கடந்தாண்டு அக்டோபர் மாத பணவீக்கத்தின் சாதகமான அடிப்படை விளைவின் தாக்கம் ஆகியவை, பணவீக்கம் குறைய முக்கிய காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் பணவீக்கத்தை பொறுத்தவரை கடந்த செப்டம்பரில் மைனஸ் 2.33 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த மாதம் மைனஸ் 5.02 சதவீதமாக மேலும் குறைந்துள்ளது. தமிழகத்தில் அதிகம் அக்., 2024 உடன் ஒப்பிடுகையில், 2025 அக்., அதிக பணவீக்கம் பதிவான முதல் ஐந்து மாநிலங்களில், 1.29 சதவீதத்துடன் தமிழகம் 5ம் இடத்தில் உள்ளது. கேரளா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், முதல் நான்கு இடங்களில் உள்ளன
15-Oct-2025