உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஒன்பதாவது ஆண்டில் ஜி.எஸ்.டி.,

ஒன்பதாவது ஆண்டில் ஜி.எஸ்.டி.,

ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017 ஜூலை 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுடன் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மறைமுக வரி விதிப்பு கட்டமைப்பை எளிமையாக்கி, பல்வேறு விதமான வரி விதிப்புகளை ஒரே குடையின் கீழ் ஜி.எஸ்.டி, கொண்டு வந்தது. இதன்படி, 17 விதமான உள்ளூர் வரி, 13 விதமான செஸ் ஆகியவை ஐந்து அடுக்கு ஜி.எஸ்.டி., கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டன.ஜி.எஸ்.டி., நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வருவாயும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இது நாட்டின் நிதி நிலையை சீராக வலுப்படுத்தியுள்ளதுடன், மறைமுக வரிவிதிப்பை மிகவும் திறன் வாய்ந்ததாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றியுள்ளது.மத்திய அரசு அறிக்கை* ஜி.எஸ்.டி., வருவாய் கடந்த ஐந்து ஆண்டுகளில், 11.37 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 22.08 லட்சம் கோடி ரூபாயாக, கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது* கடந்த 2023 - 24 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த நிதியாண்டில் வருவாய் 9.40 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது* நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் தான் அதிகபட்சமாக, 2.37 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டுள்ளதுஜி.எஸ்.டி.,க்கு முன்... சில முக்கிய வரிகள்உற்பத்தி வரிசுங்க வரிசேவை வரிமதிப்புகூட்டு வரிமத்திய விற்பனை வரிமாநில விற்பனை வரிநுழைவு வரி (அ) ஆக்ட்ராய் சொகுசு வரி பொழுதுபோக்கு வரி

முக்கிய விபரங்கள்

ஜி.எஸ்.டி., வருவாய்நிதியாண்டு மாதாந்திர சராசரி மொத்தம்2020 - 21 95,000 11,37,0002021 - 22 1,24,000 14,83,0002022 - 23 1,51,000 18,08,0002023 -24 1,68,000 20,18,0002024 - 25 1,84,000 22,08,000(ரூபாய் கோடியில்)

ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளவர்கள்

2017 65 லட்சம்2025 1.52 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ