உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அதிக பலன் அளித்த வெள்ளி முதலீடு

அதிக பலன் அளித்த வெள்ளி முதலீடு

சர்வதேச சூழல் காரணமாக தங்க முதலீடு கவனத்தை ஈர்க்கும் நிலையில், மற்றொரு மதிப்பு மிக்க உலோகமான வெள்ளி, ஆண்டு அடிப்படையில் 30 சதவீத பலன் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.இந்த ஆண்டு அக்டோபர் வரையான காலத்தில் வெள்ளி 30 சதவீத பலன் அளித்துள்ளது என்றும், தங்கம் அளித்த பலன் 23 சதவீதம் என்றும் பங்குச்சந்தை ஆய்வு நிறுவனம் கேபிடல்மைண்ட் பைனான்சியல் சர்வீசஸ் தெரிவிக்கிறது. இந்த காலத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி, 15 சதவீத பலன் அளித்துள்ளது.தங்கத்தைவிட வெள்ளி கூடுதல் பலன் அளித்திருந்தாலும், முதலீடு தொகுப்பில் வெள்ளியின் இடம் சிறிய அளவில் இருந்தால் போதும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். இதற்கு காரணம், வெள்ளியின் செயல்பாடு நீண்டகால பலனை உணர்த்துவதாக அமையவில்லை என்பதுதான்.பத்தாயிரமாண்டு முதலான காலத்தில் வெள்ளி ஐந்து முறை மட்டுமே தங்கத்தை விட கூடுதல் பலன் அளித்திருக்கிறது. எனவே, வெள்ளியின் ஒதுக்கீடு முதலீடு தொகுப்பில், 3 சதவீதம் இருந்தால் போதுமானது என வல்லுனர்கள் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை