உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 17,000 வாட்ஸாப் கணக்குகளை முடக்கியது உள்துறை அமைச்சகம்

17,000 வாட்ஸாப் கணக்குகளை முடக்கியது உள்துறை அமைச்சகம்

புதுடில்லி:சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 17,000 வாட்ஸாப் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்ற புதிய வகையிலான சைபர் குற்றங்களை தவிர்க்க, மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17,000 வாட்ஸாப் கணக்குகளை முடக்கியுள்ளது. இதில் பெருவாரியான கணக்குகள், 'சைபர்' குற்றங்களுக்கு பெயர்போன கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்தவை. இந்த கணக்குகள் அனைத்துமே, ஆன்லைன் நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கணக்குகள் என கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடம் அளித்த புகார்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, வாட்ஸாப் கணக்குகள் கண்டறியப்பட்டு இவற்றை முடக்க வாட்ஸாப் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி

சி.பி.ஐ., வருமான வரி மற்றும் சுங்க வரி அதிகாரிகளாக தங்களை அடையாளப்படுத்தி, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, கைதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், அதிக மதிப்பிலான தொகையை செலுத்த வேண்டுமென, மிரட்டி பணம் பறிக்கின்றனர். நடப்பாண்டு மட்டும், நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் என்ற கணக்கில், கடந்த அக்டோபர் மாதம் வரை 2,140 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை