உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 7 நகரங்களில் வீடு விலை 23 சதவீதம் உயர்வு

7 நகரங்களில் வீடு விலை 23 சதவீதம் உயர்வு

புதுடில்லி:சென்னை உட்பட, நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் வீடுகளின் விலை சராசரி 1.23 கோடி ரூபாயை எட்டியுள்ளது. கடந்தாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் காலத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் இதே காலத்தில், பெருநகரங் களில் வீடுகள் விலை சராசரியாக 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான 'அனராக்' தெரிவித்துஉள்ளது. சென்னை, டில்லி, கோல்கட்டா, மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய ஏழு நகரங்களில், நடப்பாண்டு விற்கப்பட்ட வீடுகளின் சராசரி மதிப்பு 1.23 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில் 1 கோடி ரூபாயாக இருந்தது. புதிய வகை வீடுகளின் விற்பனையும்; கொரோனாவுக்கு பின்னர் அதிக மதிப்புள்ள வீடுகளின் மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதுமே, இதற்கு முக்கியக் காரணமாக அமைந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !