பெங்களூரில் ஸ்டார்ட்அப்க்கு ஐ.சி.ஐ.சி.ஐ., தனி கிளை
ஸ் டார்ட்அப் நிறுவனங்களுக்கான தனித்துவமான வங்கி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பெங்களூருவில் சிறப்பு கிளையை துவங்கி உள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்ட செய்தி குறிப்பு: பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட் செக்டார் மூன்றின் 19வது மெயின் ரோட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ., 'ஸ்டார்ட்அப்' சிறப்பு கிளை அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான வங்கி கணக்கு துவங்குதல், டிஜிட்டல் வங்கி சேவைகளை மிக எளிமையாக பெற முடியும்.