உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  அடுத்த 20 ஆண்டில் வேலை என்பது விருப்ப தேர்வாக மாறி விடும்: மஸ்க்

 அடுத்த 20 ஆண்டில் வேலை என்பது விருப்ப தேர்வாக மாறி விடும்: மஸ்க்

வாஷிங்டன்: ஏ.ஐ., ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் வேகமாக வளரும் சூழலில், இன்னும் 20 ஆண்டுகளுக்குள் வேலை என்பது விருப்ப தேர்வாக மாறி விடும் என, எலான் மஸ்க் கணித்துள்ளார். ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் நடத்திய நேர்காணலில், எலான் மஸ்க் தெரிவித்ததாவது: ஏ.ஐ., மற்றும் ரோபோட்டிக்ஸ் வளர்ச்சியால், வேலை செய்ய வேண்டிய கட்டாயம் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இருக்காது. வேண்டுமானால் ஒரு விருப்ப தேர்வாக வேலை இருக்கலாம். மனிதர்கள் கடையில் காய்கறிகளை எளிதில் வாங்க முடியும் என்றாலும், வீடுகளில் தோட்டம் அமைத்து வளர்ப்பது போல் தனி விருப்பமாக வேலை இருக்கும். அதுவும் கிட்டத் தட்ட ஹாபி ஆக இருக்கும். இந்த அளவுக்கு, அனைத்து தொழிலாளர் பணியிடங்களிலும் நவீன தொழில்நுட்பம் முழுதுமாக பரவியிருக்கும். எனினும், ஸ்டார்ட்அப் மற்றும் கடினமான வேலைகளில், சீரியசான வேலை நேரம் என்பது அத்தியாவசியமாகவே இருக்கும். திறமையான இந்தியர்களால் பலன் பெற்ற நாடு அமெரிக்கா. ஆனால், கடுமையான விசா விதிகளால் தற்போது இந்தியர்களின் கனவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'என் மகன் பெயர் சேகர்'

என் மனைவி சிவோன், பாதி இந்தியர் என்பது பலருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. அதே போல், நோபல் பரிசு வென்ற சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக, என் மகன்களில் ஒருவரின் நடுப்பெயரை சேகர் என வைத்திருக்கிறேன். இதன் வாயிலாக, இந்தியர்களுடன் எனக்கு தொடர்பு இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்