மேலும் செய்திகள்
வேலையின்மை 5.60 சதவீதமாக தொடர்கிறது
16-Jul-2025
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்குள், 100 கோடி சதுர அடிகளை கடந்து, உலகின் நான்காவது மிகப்பெரிய அலுவலக சந்தையாக இந்தியா மாற இருப்பதாக, 'நைட் பிராங் இந்தியா' தெரிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது: கடந்த 2005ல் அலுவலக தேவை 20 கோடி சதுரடியாக இருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் அரையாண்டு வரை, 99.30 கோடி சதுர அடியாக அதிகரித்து உள்ளது. ஆண்டுக்கு 8.60 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதில், பெங்களூரு, டில்லி என்.சி.ஆர்., மற்றும் மும்பையில் பங்கு 60 சதவீதமாகவும், ஹைதராபாத், புனே, சென்னை நகரங்களின் பங்களிப்பு 33 சதவீதமாகவும் உள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
16-Jul-2025