உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்திய டேப்லெட் சந்தை 20% வளர்ச்சி

இந்திய டேப்லெட் சந்தை 20% வளர்ச்சி

புதுடில்லி: நாட்டின் டேப்லெட் சந்தை, கடந்த ஜூன் காலாண்டில் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக, 'சைபர் மீடியா ரிசர்ச்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 30 சதவீத பங்குடன் ஆப்பிள் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. கடந்தாண்டு ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில், ஆப்பிளின் ஐ பேடு வினியோகம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஐ பேடு 11' மாடலுக்கான வலுவான தேவை மற்றும் ஆன்லைன், ஆப்லைன் கடைகளில் தேவை அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம், 27 சதவீத சந்தை பங்குடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. லெனோவோ நிறுவனம், 16 சதவீத பங்குடன் மூன்றாம் இடத்திலும்; ஷாவ்மி, ஒன் பிளஸ் நிறுவனங்கள் முறையே நான்காவது, ஐந்தாவது இடத்திலும் உள்ளன. நடப்பாண்டில், இந்தியாவின் டேப்லெட் சந்தை 15 சதவீதம் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி