மேலும் செய்திகள்
பணம் செலுத்த இனி இந்த மோதிரம் போதும்
30-Oct-2025
ரூ.27 லட்சம் கோடிக்கு யு.பி.ஐ., பரிவர்த்தனை
02-Nov-2025
புதுடில்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வாய்ஸ் பேஸ்டு எனப்படும் குரல் அடிப்படையிலான யு.பி.ஐ., பரிவர்த்தனை சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக நிதி தொழில்நுட்ப நிறுவனமான நெட்நொர்க் பீப்புள் சர்வீசஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. என்.பி.எஸ்.டி., எனும் இந்நிறுவனம், மிஸ்கால்பே எனும் டிஜிட்டல் பேமென்ட் தளத்து டன் இணைந்து இந்த சேவையை வழங்க உள்ளது. நம் நாட்டில் சமீபத்திய தரவுகளின்படி, 50 கோடி பேர் யு.பி.ஐ., பயன்படுத்துகின்றனர். எனினும், பட்டன் போன் வைத்திருப்பவர்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள தெரியாதவர்கள் மற்றும் இணைய வசதி இல்லாத நாட்டின் தொலைதுார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இதை அணுகுவது இன்னும் சிரமமாகவே உள்ளது. எனவே, கிட்டத்தட்ட 8 5 கோடி பேர் யு.பி.ஐ., கட்டமைப்புக்கு வெளியில் உள்ளனர். இவர்களையும் டிஜிட்டல் பேமென்ட் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்காக ரிசர்வ் வங்கியும், என்.பி.சி.ஐ., எனும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகமும் இணைந்து, 'யு.பி.ஐ., 123 பே' என்ற சேவையை 2022ல் அறிமுகப்படுத்தின. இந்த சேவையை பயன்படுத்த இணையவசதி கூட அவசியமில்லை. இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. எப்படி நடக்கும்? வங்கி வழங்கும் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் செய்ய வேண்டும் இதன்பின் உங்கள் மொபைல் போனுக்கு அழைப்பு வரும் அப்போது பரிவர்த்தனை மதிப்பையும், யு.பி.ஐ., பின் நம்பரையும் உள்ளிட வேண்டும் குரல் அடிப்படையிலோ, மொபைல் கீபேட் வாயிலாகவோ உள்ளிடலாம் இந்த சேவை, 12 இந்திய மொழிகளில் வழங்கப்படும் இணையதள இணைப்பு தேவையில்லை ஆப்லைன் பரிவர்த்தனை என்பதால் மோசடிக்கான வாய்ப்பு மிகக்குறைவு.
30-Oct-2025
02-Nov-2025