உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உங்கள் குரல்(Tag)

உங்கள் குரல்(Tag)

வெல்டிங் தொழிலை பாதுகாக்க வேண்டும்

நாமக்கல் | தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் பிரச்னை: இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம் இரு மடங்கு அதிகரிப்பு ஆகியவற்றால், கேட், கிரில், ஷட்டர் தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை: தொழில் சங்க பிரதிநிதிகளை அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும். மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதுடன், சிறு நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் நடத்த தேவையான சலுகைகளையும் வழங்க வேண்டும்.

மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க வேண்டும்

அரியலுார் | தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிரச்னை: தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அருகில் வசிப்போர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில், நிறுவனங்களின் குறைகளை சரிசெய்ய போதிய வாய்ப்பளிக்காமல் அவை மூடப்படுவதாக பேரமைப்பு தெரிவித்துள்ளது. கோரிக்கை: மூடப்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி, குறைகளை சுட்டிக்காட்டி சரிசெய்ய அவகாசம் அளிக்க வேண்டும். சிறு வணிகர்களுக்கு ஆயுட்கால உரிமம் வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி