தொழில் வாய்ப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கலாம்
ரயில் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுப்பதை ஒரு தொழிலாக நடத்தலாம். இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி., அங்கீகாரம் பெற வேண்டும். தொழில் தொடங்குவது எப்படி? *ஐ.ஆர்.சி.டி.சி., அங்கீகரித்த சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். *ஆதார், பான், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். *ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், தனி முகவர் ஐ.டி., வழங்கப்படும். * ஐ.டி., வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து, அனுமதிக்கப்பட்ட சேவை கட்டணத்தை பெறலாம். கவனத்துக்கு: சொந்த ஐ.ஆர்.சி.டி.சி., கணக்கில் வணிக நோக்கில் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூடாது.விபரங்களுக்கு: www.irctc.co.inகுறிப்பு: கமிஷன் விகிதம் மாறக்கூடும். பதிவு மற்றும் சேவைக்கான கட்டணங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும்.
கமிஷன் நிலவரம்
7 சதவீதம்: ரயில் சுற்றுலா மற்றும் விடுமுறை சுற்றுலா பேக்கேஜ்கள்.6 சதவீதம்: உள்நாட்டு, வெளிநாட்டு விமான சுற்றுலா பேக்கேஜ்கள். விமான டிக்கெட் கட்டணம் தவிர்த்த தொகைக்கு மட்டும்.