உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எல்.ஐ.சி., நிகர லாபம் ரூ.10,986 கோடி

எல்.ஐ.சி., நிகர லாபம் ரூ.10,986 கோடி

சென்னை:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரை, எல்.ஐ.சி., 10,986 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட, ஐந்து சதவீதம் அதிகம். காப்பீடு பிரீமிய வருமானமும் ஐந்து சதவீதம் அதிகரித்து 1.19 லட்சம் கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த வருவாய், 2.23 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டின், முதல் காலாண்டில் 2.11 லட்சம் கோடியாக இருந்தது. பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., நிர்வகிக்கும் மொத்த சொத்து, 6.47 சதவீதம் அதிகரித்து, 57.05 லட்சம் கோடியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை