உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஸ்மார்ட் போனில் சைபர் பாதுகாப்பு செயலி நிறுவுமாறு தயாரிப்பாளர்களுக்கு உத்தரவு

 ஸ்மார்ட் போனில் சைபர் பாதுகாப்பு செயலி நிறுவுமாறு தயாரிப்பாளர்களுக்கு உத்தரவு

புதுடில்லி: புதிய ஸ்மார்ட் போன்களில் நீக்கவோ, அழிக்கவோ முடியாத வகையில், முன்கூட்டியே சைபர் பாதுகாப்பு செயலியை இடம் பெறச் செய்யுமாறு, அனைத்து ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களை, தொலை தொடர்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் மிகப்பெரிய மொபைல் போன் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில், 120 கோடிக்கும் அதிகமானோர் பயனர்களாக உள்ளனர். அரசின் தரவுகளின்படி, கடந்த ஜனவரியில் அறிமுகமான சைபர் பாதுகாப்பு செயலியான, 'சஞ்சார் சாத்தி' வாயிலாக, தொலைந்து போன 7 லட்சம் மொபைல் போன்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளன; கடந்த அக்டோபரில் மட்டும் 50,000 போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. அரசின் சைபர் பாதுகாப்பு செயலி தொடர்பாக ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம், மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் கருத்து வேறுபாட்டை கொண்டிருந்தது. சாம்சங், விவோ, ஒப்போ மற்றும் ஜியோமி நிறுவனங்கள், புதிய உத்தரவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவ., 28ம் தேதி வெளியிட்ட உத்தரவில், முக்கிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள், 90 நாட்களுக்குள் அரசின் சஞ்சார் சாத்தி செயலியை, புதிய மொபைல் போன்களில் நிறுவ வேண்டும். அதை, பயனர்கள் நீக்க முடியாத வகையில் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுஉள்ளது. மேலும், ஏற்கனவே வினியோக தொடரில் உள்ள மொபைல் போன்களுக்கு, மென்பொருள் அப்டேட்கள் வாயிலாக செயலியை நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும். ஆப்பிள் நிறுவனம், அதற்கு சொந்தமான செயலிகளை ஐபோன்களில் முன்கூட்டியே நிறுவியிருக்கும் நிலையில், உள்நிறுவன விதிகளின்படி, மொபைல் போன் விற்பனைக்கு முன், அரசு அல்லது மூன்றாம் தரப்பு செயலியை நிறுவுவதற்கு தடை விதித்து உள்ளது. இதனிடையே, தொலை தொடர்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன், தங்களிடம் ஆலோசிக்கவில்லை என ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவ னங்கள் கவலை தெரிவித்து உ ள்ளன. அரசின் சஞ்சார் சாத்தி செயலியை, பயனர்கள் நீக்க, அழிக்க முடியாத வகையில், புதிய போன்களில் நிறுவ வேண்டும். சாம்சங், விவோ, ஒப்போ மற்றும் ஜியோமி நிறுவனங்கள், புதிய உத்தரவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ