உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கொழும்பு டாக்யார்டை வாங்கும் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்

கொழும்பு டாக்யார்டை வாங்கும் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்

மும்பையை தளமாகக் கொண்ட கப்பல் கட்டும் பொதுத்துறை நிறுவனமான மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம், இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த டாக்யார்டு நிறுவனத்தின் 452 கோடி ரூபாய் மதிப்பிலான 51 சதவீத பங்குகளை கையகப்படுத்த உள்ளதாக பங்கு சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. நான்கு முதல் ஆறு வாரங்களில் இப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இந்திய கப்பல் கட்டும் நிறுவனம், வெளிநாட்டு கப்பல் கட்டும் நிறுவனத்தை வாங்குவது இதுவே முதல்முறையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி