உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பரஸ்பர வரி விதிப்பு எதிரொலி ஏற்றுமதியாளர்களுடன் 9ம் தேதி அமைச்சர் கோயல் ஆலோசனை

பரஸ்பர வரி விதிப்பு எதிரொலி ஏற்றுமதியாளர்களுடன் 9ம் தேதி அமைச்சர் கோயல் ஆலோசனை

புதுடில்லி:அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நாளை மறுதினம் அமலுக்கு வர உள்ள நிலையில், இதன் தாக்கம் குறித்து ஆலோசிக்க அன்றைய தினம், இந்திய ஏற்றுமதியாளர்களை சந்தித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆலோசனை நடத்துகிறார். இந்தியா மீது அமெரிக்கா 26 சதவீத பரஸ்பர வரியை விதித்துள்ளது. இது, நாளை மறுதினம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து, மத்திய வர்த்தக அமைச்சகம் மதிப்பீடு செய்து வருகிறது. மேலும், இதில் இருந்து நிவாரணம் பெற, அமெரிக்காவுடனான இருதரப்பு பேச்சு நடத்த மத்திய அரசு நம்பிக்கையுடன் உள்ளது-. இதையடுத்து, ஏற்றுமதிகளில் பரஸ்பர தாக்கம், அதை சமாளிப்பதற்கான சாத்தியமான உத்திகள் குறித்து விவாதிக்க, நாளை மறுதினம் ஏற்றுமதியாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தை வர்த்தக அமைச்சகம் கூட்டி உள்ளது. வரி விதிப்பில் இருந்து தப்பிக்கும் விதமாக, ஏற்கனவே பெற்றுள்ள ஏற்றுமதி ஆர்டர்களை வருகிற 9ம் தேதிக்கு முன்னரே விரைந்து அனுப்பும் நடவடிக்கையில் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் புதிய ஆர்டர்கள் எதுவும் இல்லாததால், ஏற்றுமதியாளர்கள் அனைவரும் காத்திருப்பு மற்றும் கண்காணிப்பில் உள்ளதால், தற்போது நிச்சயமற்ற தன்மை இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை