உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ராணுவ அமைச்சகம் பெல் ஒப்பந்தம்

ராணுவ அமைச்சகம் பெல் ஒப்பந்தம்

பெங்களூரு:ராணுவ பயன்பாட்டுக்கு, நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை கொள்முதல் செய்ய, ராணுவ அமைச்சகம், 'பெல்' என்ற 'பாரத் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்துக்கு ஆர்டர் வழங்கியுள்ளது. ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ராணுவ அமைச்சகம் மற்றும் பெல் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த கொள்முதல், 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் 'பை' என்ற பிரிவின் கீழ் வருகிறது. அதாவது, வடிவமைப்பு, உருவாக்குதல் மற்றும் உற்பத்தி ஆகிய அனைத்தும் உள்நாட்டில் செய்யப்படுவதை இந்த பிரிவு குறிக்கிறது. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்து, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டது. எதிரி நாட்டு ஏவுகணைகள், போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள், இதர வான் அச்சுறுத்தல்களை எளிதாக கண்டறியும் திறன் இந்த அமைப்புக்கு உண்டு. இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும், எந்த வானிலையிலும், எதிரி நாடு ஜேமர்கள் பயன்படுத்தப்பட்டாலும், குறைந்த உயரத்தில் கூட துல்லியமாக செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி