இயக்குநர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை நிதியமைச்சகம் வலியுறுத்தல்
பொ துத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தங்களது முழுநேர இயக்குநர்கள் மீது, விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை இருப்பின், அதனை நிதியமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச்சேவைகள் துறை வலியுறுத்தி உள்ளது. இயக்குநராக நியமிக்கப்படும் அதிகாரிகள் மீது நிலுவையில் உள்ள தனிப்பட்ட குற்றச்சாட்டுகள், நீதிமன்ற கருத்துகள், சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகளின் குறிப்புகளை அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.