உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சி.எஸ்.ஆர்., நிதி செலவிடுவதில் கம்பெனிகளுக்கு புது உத்தரவு

சி.எஸ்.ஆர்., நிதி செலவிடுவதில் கம்பெனிகளுக்கு புது உத்தரவு

சென்னை:நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதியை, கலெக்டர் வாயிலாக செலவிட, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.சட்டசபையில் அவர் வெளியிட்ட தகவல்:தொழில் நிறுவனங்கள் அவர்களது சி.எஸ்.ஆர்., நிதியில், நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, ஏற்கனவே அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் நிறுவனங்கள் நேரடியாக பள்ளிகள், மருத்துவமனைகள் சி.எஸ்.ஆர்., நிதியில் உதவி செய்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு சி.எஸ்.ஆர்., போய் சேர்ந்தால், மக்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். எனவே தான், இனி கலெக்டர் வாயிலாக சி.எஸ்.ஆர்., நிதியை செலவிட வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்திஉள்ளோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
ஏப் 26, 2025 08:44

இதுதான் அட்டைக்கத்தி சண்டை என்பதோ அது எப்படி மத்திய அரசின் வருமான வரித்துறை செயல்பாட்டில் மாநில தொழில் துறை உத்தரவு போட முடியும்?


சமீபத்திய செய்தி