உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கிராமப்புற மக்களுக்கு புதிய காப்பீடு வசதி

கிராமப்புற மக்களுக்கு புதிய காப்பீடு வசதி

கி ராமப்புற மக்களுக்கான ஆயுள், ஆரோக்கிய மற்றும் சொத்து காப்பீடை உள்ளடக்கிய, 'பீமா விஸ்தார்' காப்பீடு திட்டம், இந்தாண்டு டிசம்பருக்குள் அறிமுகம் செய்யப்படும் என ஆயுள் காப்பீடு கவுன்சிலின் காப்பீடு விழிப்புணர்வு குழு தெரிவித்து உள்ளது. எல்.ஐ.சி., உட்பட, அனைத்து 26 ஆயுள் காப்பீடு நிறுவனங்களும் உறுப்பினராக இடம்பெற்றுள்ள இந்த அமைப்பின் தலைவர் கமலேஷ் ராவ் தெரிவித்து உள்ளதாவது: இந்தியாவின் கிராமப்புறங்களில், அனைத்து காப்பீடு நிறுவனங்களும் தனிநபருக்கான 5 லட்சம் ரூபாய்க்கான காப்பீடை, ஒரே மாதிரியான விலையில் விற்பனை செய்ய உள்ளன. கிராமப்புறங்களில் காப்பீடு செய்துள்ளோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதை அதிகரிக்கும் நோக்கத்துடன், பீமா விஸ்தார் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி